குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா !
குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா !
குடியாத்தம், அக்டோபர் 24 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவ லகம் எதிரில், டாக்டர் வி.என். கண்ணன் தலைமையில் இயங்கி வரும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்மெண்ட் நில தரகர்கள் நலச் சங்கம் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா நலச் சங்கத்தின் 23-ஆம் ஆண்டுதொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவில் சங்கக் கொடியேற்றி ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு ஆர்.இ. பாண்டியன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் எம். பாபு வரவேற்புரை ஆற்றினார். டி. ராஜா முன்னிலை வகித்தார். இதில் சங்கப் பொருளாளர் கோ. தண்டபாணி, நகரச் செயலாளர் முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் பிச்சாண்டி, மாணிக் கம், கோபி, முருகேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி, பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியில் டி. மோகன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்