திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!!
திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் பள்ளி கட்டிடங் களை திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகளில்
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கும் விதமாக, திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடத் தினை திறந்து வைத்து, செதுக்கு சிற்பம் பிரிவில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வென்று, மாநில அளவி லான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள மாணவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச் சந்திரன், இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா வருவாய் கோட்டாட்சியர் ராஜி மற்றும் பலர் உள்ளனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.