ஆற்காடு பஸ் நிலையம் அருகே வளர் பிறை பிரதோஷதை முன்னிட்டு அகத்தி யர் அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் !!

ஆற்காடு பஸ் நிலையம் அருகே வளர் பிறை பிரதோஷதை முன்னிட்டு அகத்தி யர் அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் !!
ராணிப்பேட்டை , அக்டோபர் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மாதந்தோறும் வரும் வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு அகத்தியர் அறக்கட்டளை சார்பாக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் இணைந்து அன்னதானத் தை நடத்தினர். முன்னதாக, அகத்தியர் திருவுருவப் படத்திற்கு மாலை அணி வித்து தீபாராதனை காட்டப்பட்டது. அப் போது அரோகரா கோஷங்கள் விண் ணைப் பிளக்க பக்தர்கள் பக்திப் பரவ சத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் பேசிய அகத்தியர் அறக்கட்டளை தலைவர் இளங்கோ, ஆன்மீகப் பெரி யோர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பி னர்களின் துணையோடு இந்தத் தெய் வீகப் பணியும் அன்னதானச் சேவையும் எதிர்காலத்திலும் தொடர்ந்து தடையில் லாமல் நடத்துவேன் என்று உறுதி யளித்தார் .

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.
(9150223444 )

Popular posts from this blog

குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா !

திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!!