அணைக்கட்டு பட்டாசு ஆலை வெடி விபத் தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத் தற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி !
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி !
அணைக்கட்டு , அக்டோபர் 23 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதி யில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயி ரிழந்த காயத்ரியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டது. தமிழ்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள், வெடி விபத்தில் உயிரிழ ந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள், உயிரிழந்த காயத்ரியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை 22.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் து. சுரேஷ் உடனிருந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்